உடன்வந்து காத்திடம்மா
தீராவினை வந்து தீயாய் வாட்டுதம்மா
மாளா துயரெல்லாம் மைந்தன் எனை
கொல்லுதம்மா போகா துயரெல்லாம் புவியில்
எனக் கொருவனுக்கே வந்ததாய் என்மனம்
துடிக்குதம்மா அழைத்த குரலுக்கு விரைந்திடும்
தாய்நீ பாராமுகமாய் இருந்த தென்ன
நாவால் அழைத்து நாவும் வறண்டதடி
உயிரால் உனை அழைத்தேன் உடன்வந்து
காத்திடம்மா மலையன்குளம் நின்ற தாயே
சிவநீலி இசக்கி அம்மையே !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment