மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் சரண மாலை!
உ
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் சரண மாலை!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சரணபிரியகி சம்பூரண ரூபநாயகி காண ( 1 )
பிரியகி கனகரத்தின கிரீடநாயகி - அநாத
ரட்சகி அளவில்லா அருள்பொழி சிவப்ரிய
நாயகி செந்தூர திலகவாசகி சிவநீலிஇசக்கியே சரணம்!
சுந்தரி கல்யாணி சர்வலோக நாயகி ( 2 )
முன்னை மெய்பாதி பெற்ற - முக்கண்ணி
எந்தை உயிரும் உடலும் உட்கலந்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
மெய்ப்பொருள் ஆவது யாதென்றே அறிந்தேன் ( 3 )
மேன்மை மிகுவானவரும் வியந்து - போற்றும்
உய்வை தரும் உடையவனோடு நின்ற
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
பிறப்பரு வரமே வேண்டினர் மறையோர்; ( 4 )
பிறப்பே வரமென்று வியந்த - மூடனையே;
பிறப்பரு நிலையை பெரிதென் றுணரவைத்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
அறமது யாதென்றே அறியா மூடனை; ( 5 )
வேதமது உரைத்த மொழியே - உயர்தனி
அறமென் றுணரச் செய்த தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
சர்வமும் காக்கும் சங்கரி அபயநாயகி ( 6 )
ஆபத் பாந்தவி எம்மைக்கும் - எமை
காக்கும் சிவனிட பாகம்நின்ற தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
பேயென்றே உரைத்த மாபறை யோரை ( 7 )
அழித்து; தாயென்றே உரைத்த - வரை
பெற்ற தாயினும் சாலப ரிந்தனைக்கும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
தன்மகற்காய் முன்னின் றுரைக்கும் தாய்போல்; ( 8 )
என்வினை எல்லாம் பொறுத்தருள - முன்னை
முன்னின் றுரைக்கும் என் தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
அறிந்தே மறையோர் இகழும் வழிதனில் ( 9 )
மாபெரும் பாவமெல்லாம் செய்த - பாவினான்;
சரணமென்றே நின்னடிபற்றி னகால்பாவி எனைக்காக்கும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
பிறப்பால் தாழ்வில்லை என்றே உலகோர் ( 10 )
உணர; சேற்றிலோர் செந்தா - மரையாய்
ஆடல் மகளிர் குலம்தனில் வந்ததாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
தனக் கென்றேதும் வேண்டிடா உலக ( 11 )
உயிர் நன்மைக்காய் வேண்டும் - உயர்மறையோர்
தொழுதேத்தும் சிவசக்தி ரூப தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
நர்த்தகி நடனசிங்காரி நாதமே வடிவான ( 12 )
நாயகி வித்தகி வினையெல்லாம் - வேரறுக்கும்
வீரவடிவுடைய தாயே மலையன்குளம் நின்ற
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
அலங்கார பிரியகிஅபய கரமநீட்டும் தாயே ( 13 )
சாம்பிராணி வாசகி சர்வமுமாகி - நின்றதாயே
முப்பொழுதும் சிந்தையில் உனைவைத்தே பணிந்தேன்
உமையே சிவநீலி இசக்கியே சரணம்
சாம்பிராணி வாசகி சர்வமுமாகி - நின்றதாயே
முப்பொழுதும் சிந்தையில் உனைவைத்தே பணிந்தேன்
உமையே சிவநீலி இசக்கியே சரணம்
மலையளவு துயர்வந்து மனதை வருத்திடினும் ( 14 )
மலையன்குளத்தால் என்றே மனதால் - நினைத்திடின்
கடலிலிட்ட காயம்போல் கரைந்திட அருளும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
போகத்துயர் உண்டோஎன்று மருத்துவம் தனைநாடி ( 15 )
யாவரும் கைவிட்டநேரம் இசக்கி - நின்னிருத்தாள்
தஞ்சமென்றே இருக பற்றினேன் அருள்வாய்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
மனத்திலே உனைநினைக்க மலை அளவுப்பொருள் ( 16 )
கொடுத்தாய் சிந்தையில் உனைநினைக்க - செல்வங்கள்
எல்லாம் கொடுத்தாய்; கொடுத்தெம்மை காக்கும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
தர்மம்தனை ஏந்தும் பிள்ளையாய் இடுப்பில் ( 17 )
அமர்த்தி அதர்ம வினையெல்லாம் - கடைக்கண்
பார்வையால் களைந்து நீக்கும் தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
அழுதேன் தொழுதேன் போகாதுயரால் புலம்பி ( 18 )
தவித்தேன்; நான்அழும் குரல்கேட்டும் - பாவிஎன்
பாவமெல்லாம் பார்தனில் போக அருள்புரிந்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
பிள்ளை துன்பம்கண்டு பெற்றதாய் உயிர் ( 19 )
வருந்துமாம்; பிள்ளையென் துன்பம் - கண்டு
வருந்தி அருள்புரிய வரும் தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
எத்துன்பம் வந்திடினும் என்னால் கடந்திட ( 20 )
முடியுமென்று மெத்தனமாய் நடந்தேன்; - என்னால்
அல்ல உன்னால் கடந்தேனென்று உணரச்செய்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !
வேதம் தொழும் நாயகி வினையெல்லாம் ( 21 )
தீர்க்க நாற்புறம் வயல்சூழ் - நல்லதோர்
சிறுநகர் மலைய ன்குளம் தனில்நின்ற
தாயே சிவநீலி இசக்கியே சரணம் !
ஓம் ஸ்ரீ இசக்கி அம்பிகையே சரணம் சரணம் !!
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman
0 comments:
Post a Comment