Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

இசக்கியம்மன் வரலாறு இனிய தமிழில்





இசக்கியம்மன் வரலாறு இனிய தமிழில்




கல்யாணி சுந்தரி கைலை நாதன் பாகத்துறை நீலி
நாதம் கேட்டு நடனமாடிய நாயகி
தென்னிலங்கை ராவணன் தெய்வீக காணம் பாட
முன்னவன் தாளத்தில் முக்கண்ணி ஆட
பரமன் அவர் சாபத்தால் பார் தனில்
நடனமாதர் குலத்தில் நங்கையாய் பிறக்க
அந்தணர் குலத்தில் அரனும் உதிக்க;


தன்னவன் அந்தணனால் தானும் அழிய
தன்னுயிர் பிரியும் போது அருங்கள்ளி சாட்சி என்று நங்கையும் மாள
முன்கொன்ற பழி தீர்க்க முக்கண்ணன் அருளால்
சோழவன் குலத்தில் ஜோதியாய் தோன்றி
தன்னவன் அந்தணன் செட்டியார் குலத்தில் ஆனந்தனாய் பிறக்க
ஆனந்தன் வரும்காலம் செங்காட்டில் அவன் நாயகியாய் இவளும் மறிக்க
அரண்ட ஆனந்தன் பழையனூர் தனில் எழுபது வேளாளர் தன்னை அழைக்க;


நாயகி நான்முகி சக்தி சொரூபிணி இவனே நாயகன் என்று
அருங்கள்ளி குழந்தையோடு அவர்களிடம் உரைக்க
மங்கை இவள் வாக்கில் மாநிலமும் மதி மயங்கி
இருப்பாய் செட்டி இவளுடன் ஓர் இரவு
உனக்கேதும் நடந்தால் இன்னுயிர் விடுவோம் என்று
தனியோர் மண்டபத்தில் இருவறை அமர்த்த ;


இருள் சூழ் நேரம் நாயும் நரியும் தனியே உளற
பேயும் பிசாசும் இவள் பின் நிற்க
நீலி என இவளும் உருவே மாறி ;


காண்போர் கலங்க கள்ளி பழ கண்கள்
பார்ப்போர் பதற பாம்பென சடைகள்
சிவந்த முகம் செந்நாரை அலகென சிவநீலி பற்கள்
மாண்டவர் மண்டையோடு இரு காதில் குண்டலம்
செந்நிற ஆடை மேனியில் புரள
விழுந்த நாவோ மார்பில் தவழ
ஆளுயர் அரவம் அறையில் பின்னி
காலில் சதங்கை கலியும் நடுங்க
சூலமும் வாழும் கைகளில் ஏந்தி
கள்ளி குழந்தை இடுப்பினில் இருக்க ;


முன்கொன்ற பழிதனை முன்னே நிறுத்தி
முக்கவர் சூலத்தால் அவன் மார்பை பிளக்க
செந்நிற குருதி சேறென ஓட
கள்ளி கொப்பை மார்பினில் நிறுத்தி ;


கொன்றேன் கொன்றேன் குலம் பழித்தவன் தன்னை
அழித்தேன் அழித்தேன் அறம் பழித்த அந்தணன் தன்னை
வென்றேன் வென்றேன் வேதமும் பழித்த வேதியன் தன்னை
காப்பேன் காப்பேன் கார் தனில் மங்கையர் வாழ்வு தனை என்று;


விடியும்வரை வீதியில் நீலியாய் ஆடி
விடியும் வேளை மாயமாய் மறைய
விடிந்து கண்டு ஊரவர் எழுபது பேரும்
சத்திய வாக்கின்படி தீ பாய்ந்து மாண்டனர்
அகிலமெல்லாம் அதிர ஆணவ சிரிப்பை உதட்டினில் நிறுத்தி
ஈரேழுலகமும்  இன்றுவரை இயங்க இயக்கு சக்தியாய்
இசக்கியாய் நின்ற தாயே
மலையன்குளம் இசக்கியம்மனே போற்றி போற்றி !


ஓம் மலையன்குளத்தாலே போற்றி !
ஓம் மலைபோல் வாழ்வளிப்பவளே போற்றி !
ஓம் மழலை வரம் அளிப்பவளே போற்றி !
ஓம் மங்காபுகழ் தருபவளே போற்றி !
ஓம் தீவினை அறுப்பவளே போற்றி !
ஓம் சிவசக்தி சொரூபிணியே போற்றி !
ஓம் சிவநீலி இசக்கியே போற்றி !


ஓம் இசக்கி அம்பிகையே போற்றி போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment