மலையன்குளம் இசக்கியம்மன் துதி!
மலையன்குளம் இசக்கியம்மன் துதி!
அல்லல் அகற்றி அறிவை பெருக்கி
வள்ளல் மகனாய் வாழ வைக்கும்
தாயே நீலி போற்றி !
துன்பம் நீக்கி துணிவை தந்து
என்றும் எனக்கு துணை நிற்கும்
தாயே நீலி போற்றி !
வன்மம் நீக்கி வளமை தந்து
என் வாழ்வின் வழித்துணையாய் வருபவளே
தாயே நீலி போற்றி !
காமம் அறுத்து கடமை உணர்த்தி
காலமெல்லாம் என்னை காக்கும்
தாயே நீலி போற்றி !
கோபம் நீக்கி குணமது தந்து
என் குடும்பமெல்லாம் காக்கும்
தாயே நீலி போற்றி !
மடமை நீக்கி மாயையென உணரச்செய்து
மங்களம் வாழ்வில் தந்தருள் என்
தாயே நீலி போற்றி !
எனை எவர் ஏசிடினும் பேசிடினும்
என் மனம் கலங்காமல் காக்கும்
தாயே நீலி போற்றி !
தாயினும் சிறந் தென்னை காக்கும்
என் தாயே மலையன்குளம் இசக்கியம்மனே போற்றி போற்றி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment