சிவநீலி இசக்கியம்மன் துதி
சிவநீலி இசக்கியம்மன் துதி !

அம்மா அழகே அதிரூப சுந்தரி
வன்மம் வாளென வாழ்வை தகர்க்க
கோபம் கோடரியாய் குலத்தை குலைக்க
பொறாமை புறமுதுகில் புலிஎன பாய
பெண்மோகம் பேராசை என்வாழ்வை கெடுக்க
இவை அல்லால் புறத்தோர் என்னமோ
இடி என சிரத்தில் இறங்க
போகும்வழி மறந்து பேயாய் நின்றேன்
காக்கும் தெய்வமே சிவநீலி தாயே
உன் அன்பெனும் அஸ்திரம் கொண்டு
அனைத்தையும் வென்று மகன் என்
வாழ்வை இறையடி சேர்க்கும் என்தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !
( நீலிதாசன் )
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்( நீலிதாசன் )
0 comments:
Post a Comment