அருள்மழை பொழிவாய் இசக்கியம்மா!
அருள்மழை பொழிவாய் இசக்கியம்மா!
அம்மையே சக்தியை அகிலமெல்லாம் நிலை அருள் நீலி தாயே !
உண்மையாய் மனதினில் உன்னையே பணிந்தேன்
ஒரு முறை நீ பாரம்மா !
எத்துன்பம் வந்திடினும் எவர் என்னை பழித்திடினும்
அன்னை எனை நீங்கிடாதே !
கறைபடிந்த உள்ளத்தான் காலத்தால் மாறினேன்
காப்பவள் நீ என்று நான் உணர்ந்தேன் !
ஈரேழுலகமும் நின்றாலும் தாயே சிவநீலி
என்கரம் பிடித்தே எனை நடத்துவாய் !
பார்தனில் வாழும்கால் பாவி எனை விலக்கிடாமல்
பாசமாய் நீ பாரம்மா !
அருள்மழை பொழிவாய் மலையன்குளம் நின்ற
சிவ நீலி இசக்கியம்மா !
ஓம் சக்தி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment