Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்




எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும்
பருவத மெல்லாம் சிதைத்து காலனையும்
அழைத்து வரும் வினையெல்லாம் வாளால்
வெட்டி நாற்புறம் நின்றென்னை காக்கும்
எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்!

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman

தீயோர் மிரண்டிட





தீயோர் மிரண்டிட வானம்பிளந்து செந்தீ
எங்கும்பரவ எம்பகைஞர் அரண்டிட சூலத்தை
முன்செலுத்தி சுடலை தனல்பிடித்து  பொங்கும்
கடலில்வரும் சூறை காற்றாய் சுழன்று
வருவாள் என்னம்மை இசக்கியே!

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman

முப்புரம் எரித்திட்ட சிவனிட பாகத்து






முப்புரம் எரித்திட்ட சிவனிட பாகத்து
தேவியின் செந்தீ வடிவெங்கள் நீலி
தம்மக்கள் வருந்திட துன்பம் இளைத்தவர்
சிரம்வெட்டி வீழ்த்திடுவாள் இசக்கி எனுமிவள்

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman

பாத சிலம்பும் ரத்தினம் பதித்தபொன்





பாத சிலம்பும் ரத்தினம் பதித்தபொன்
மூக்குத்தியும் தணலாய் எரியும் இருகண்
பார்வையும் ஓங்கிய கரத்தில் சூலமும்
உயர்பொன் பட்டும் தரித்து சிரிக்கும்
குழந்தை இடுப்பினில் இருக்க மலையன்குளம்
நின்ற சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman

துன்பம் அகற்றும் இசக்கிஅம்மை





வலியதுன்ப மெல்லாம் வாள்கொண்ட கற்றி
வராதிருக்க போகதுயரொடு கொடும் பிணியகற்றி
மற்றும் ஒருத்தீமை என்றும்பின் தொடர்ந்திடாமல்
இருந்தெம்மை காக்கும் சிவநீலி இசக்கி நம்துணையே !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman

மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் சரண மாலை!



மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன்  சரண மாலை!
-----------------------------------------------------------------------------------------------------------------------------



சரணபிரியகி  சம்பூரண ரூபநாயகி காண ( 1 )
பிரியகி கனகரத்தின கிரீடநாயகி - அநாத
ரட்சகி அளவில்லா அருள்பொழி   சிவப்ரிய
நாயகி செந்தூர திலகவாசகி  சிவநீலிஇசக்கியே சரணம்!


சுந்தரி கல்யாணி சர்வலோக நாயகி ( 2 )
முன்னை மெய்பாதி பெற்ற - முக்கண்ணி
எந்தை உயிரும் உடலும் உட்கலந்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


மெய்ப்பொருள் ஆவது யாதென்றே அறிந்தேன் ( 3 )
மேன்மை மிகுவானவரும் வியந்து - போற்றும்
உய்வை தரும் உடையவனோடு நின்ற
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


பிறப்பரு வரமே வேண்டினர் மறையோர்; ( 4 )
பிறப்பே வரமென்று வியந்த - மூடனையே;
பிறப்பரு நிலையை பெரிதென் றுணரவைத்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


அறமது யாதென்றே அறியா மூடனை; ( 5 )
வேதமது உரைத்த மொழியே - உயர்தனி
அறமென் றுணரச்  செய்த தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


சர்வமும் காக்கும் சங்கரி அபயநாயகி ( 6 )
ஆபத் பாந்தவி எம்மைக்கும் - எமை  
காக்கும் சிவனிட பாகம்நின்ற தாயே;  
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


பேயென்றே உரைத்த மாபறை யோரை   ( 7 )
அழித்து; தாயென்றே உரைத்த - வரை
பெற்ற தாயினும் சாலப ரிந்தனைக்கும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


தன்மகற்காய் முன்னின் றுரைக்கும் தாய்போல்; ( 8 )
என்வினை எல்லாம் பொறுத்தருள -  முன்னை
முன்னின் றுரைக்கும் என் தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !

அறிந்தே  மறையோர் இகழும் வழிதனில் ( 9 )
மாபெரும் பாவமெல்லாம்  செய்த - பாவினான்;
சரணமென்றே நின்னடிபற்றி னகால்பாவி எனைக்காக்கும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


பிறப்பால் தாழ்வில்லை என்றே  உலகோர் ( 10 )
உணர; சேற்றிலோர் செந்தா - மரையாய்  
ஆடல் மகளிர் குலம்தனில் வந்ததாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


தனக் கென்றேதும் வேண்டிடா உலக ( 11 )
உயிர்  நன்மைக்காய் வேண்டும் -  உயர்மறையோர்
தொழுதேத்தும் சிவசக்தி ரூப  தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


நர்த்தகி நடனசிங்காரி நாதமே வடிவான ( 12 )
நாயகி வித்தகி வினையெல்லாம் - வேரறுக்கும்
வீரவடிவுடைய  தாயே மலையன்குளம் நின்ற
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


அலங்கார பிரியகிஅபய கரமநீட்டும் தாயே ( 13 )
சாம்பிராணி வாசகி சர்வமுமாகி  - நின்றதாயே
முப்பொழுதும் சிந்தையில் உனைவைத்தே பணிந்தேன்
உமையே சிவநீலி இசக்கியே சரணம்


மலையளவு  துயர்வந்து மனதை வருத்திடினும் ( 14 )
மலையன்குளத்தால் என்றே மனதால் - நினைத்திடின்
கடலிலிட்ட  காயம்போல் கரைந்திட அருளும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


போகத்துயர் உண்டோஎன்று மருத்துவம் தனைநாடி ( 15 )
யாவரும் கைவிட்டநேரம் இசக்கி  - நின்னிருத்தாள்
தஞ்சமென்றே  இருக பற்றினேன் அருள்வாய்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


மனத்திலே உனைநினைக்க மலை அளவுப்பொருள் ( 16 )
கொடுத்தாய் சிந்தையில் உனைநினைக்க - செல்வங்கள்
எல்லாம் கொடுத்தாய்; கொடுத்தெம்மை காக்கும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !



தர்மம்தனை ஏந்தும் பிள்ளையாய் இடுப்பில் ( 17 )
அமர்த்தி  அதர்ம வினையெல்லாம் - கடைக்கண்
பார்வையால் களைந்து நீக்கும் தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


அழுதேன் தொழுதேன் போகாதுயரால் புலம்பி ( 18 )
தவித்தேன்; நான்அழும் குரல்கேட்டும் - பாவிஎன்
பாவமெல்லாம் பார்தனில் போக அருள்புரிந்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


பிள்ளை துன்பம்கண்டு பெற்றதாய் உயிர் ( 19 )
வருந்துமாம்; பிள்ளையென் துன்பம் - கண்டு
வருந்தி அருள்புரிய வரும் தாயே
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


எத்துன்பம் வந்திடினும் என்னால் கடந்திட ( 20 )
முடியுமென்று  மெத்தனமாய் நடந்தேன்; - என்னால்
அல்ல உன்னால் கடந்தேனென்று உணரச்செய்த  
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !

வேதம் தொழும் நாயகி வினையெல்லாம் ( 21 )
தீர்க்க நாற்புறம் வயல்சூழ்  - நல்லதோர்
சிறுநகர் மலைய ன்குளம் தனில்நின்ற
தாயே சிவநீலி இசக்கியே சரணம் !


ஓம் ஸ்ரீ இசக்கி அம்பிகையே சரணம் சரணம் !!

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

#malayankulam_esakkiamman
#esakkiamman
#sree_neeli_amman